‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசரைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். பாரதிராஜாவின் கதைத்தழுவலை அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் படத்திலும் எதிர்பார்த்து ஒரு குழு ரசிகர்களும், இளையராஜா-பாரதிராஜா மறுஇணைப்புக்கு ஒரு குழு ரசிகர்களும், எதிர்பார்ப்பே இல்லாமல் ஒரு குழு ரசிகர்களும் இருக்க, இதற்கு இடையே டீசர் வெளியானது கலவையான விமர்சனத்தோடு வரவேற்பு பெற்றுள்ளது.







