முக்கியச் செய்திகள்செய்திகள்விளையாட்டு

மொத்தமே 56 ரன்கள் மட்டும் தான்! மோசமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி!

11.5 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மிக குறைவாக 56 ரன்கள் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதிய நடப்பு டி20 உலகக் கோப்பையின் முதல் அரை இறுதி போட்டி டரூபா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரிலிருந்து விக்கெட்களை இழக்கத் தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

28 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த ஆப்கானிஸ்தான்  அணி வீரர்கள், தென்னாப்பிரிக்கா வீரர்களின் வேகமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.  10 ஓவர்களில் 50 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த ஆப்கானிஸ்தான் அணி, 12வது ஓவருக்குள் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நான்கு வீரர்கள் வேகப் பந்துவீச்சில் ஸ்டம்புகள் தெறிக்க போல்டாகி அவுட்டானதுடன், மூன்று வீரர்கள் சுழற் பந்துவீச்சாளர் ஷம்சி பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகி இருந்தார்கள். ஆப்கானிஸ்தான் வீரர்களால் பந்தின் வேகம் மற்றும் பவுன்சை கணிக்க முடியவில்லை. அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 10 ரன்கள் எடுத்திருந்தார்.

முதன்முறையாக டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி வரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் படுமோசமாக பேட்டிங் செய்து 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க்கோ ஜான்சன் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் ஷாம்சி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். காகிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நோர்ஜே தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை!

Halley Karthik

வெற்றி துரைசாமியின் மறைவு… ‘விடாமுயற்சி’ அப்டேட்டை தள்ளிப்போட்ட அஜித்!

Web Editor

’50வது பிறந்த நாளை’ குடும்பத்துடன் கொண்டாடிய ‘சச்சின்’; பலர் இதயங்களை கவர்ந்த இன்ஸ்டா பதிவு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading