இன்று வெளியாகிறது ‘தலைவர் 171’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் |  ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்! 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. ரஜினிகாந்த்  தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.  ஜெய்பீம்…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

ரஜினிகாந்த்  தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.  ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை முடித்து விட்டு ரஜினி,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது.  இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.  இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.  மேலும் இந்த படத்தின் டைட்டில் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

https://twitter.com/sunpictures/status/1782280686919164248?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1782280686919164248%7Ctwgr%5E57a480cda6024a5ccbb07fddde475eba92752864%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.latestly.com%2Fentertainment%2Fcinema%2Fthe-teaser-for-rajinkanth-and-lokesh-kanagarajs-film-thalaivar-171-will-be-released-on-april-22-at-this-time-17680.html

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.