‘கார்த்தி27’ படத்தின் தலைப்பு வெளியானது!

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு மெய்யழகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி – நடிகை த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’.…

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு மெய்யழகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி – நடிகை த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின்பு பல முன்னாள் மாணவ, மாணவியர்கள் – ஆசிரியர்கள் சந்திப்புக்கள் நடைபெற்றது.

இந்நிலையில் ஆறு வருடங்களுக்கு பிறகு பிரேம்குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்  அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் நடித்துள்ளனர். இது கார்த்தியின் 27வது படமாகும். படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்தது.

 

அதன்படி படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்திற்கு மெய்யழகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் மற்றொரு அறிவிப்பு 7 மணிக்கு வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.