‘போகுமிடம் வெகுதூரமில்லை’ திரைப்படத்தின் டிரெயிலரை வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி!

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடித்துள்ள ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படத்தின் டிரெயிலரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநரான மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள திரைப்படம் போகுமிடம் வெகு தூரமில்லை.…

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடித்துள்ள ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படத்தின் டிரெயிலரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநரான மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள திரைப்படம் போகுமிடம் வெகு தூரமில்லை. இப்படத்தில் மெரி ரிக்கெட்ஸ், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி படத்தை தயாரித்துள்ளார். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மாறுபட்ட கதைக்களத்தில், மனதை உருக வைக்கும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுபோன்று இப்படத்தின் முதல் பாடலான  ‘ஏன்டி என்ன’ என்னும் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விமல் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 3ல் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரெயிலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு தனது வாழ்த்தினை படக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.