#LCU-வில் ராகவா லாரன்ஸ் | வீடியோ வெளியிட்டு ‘Benz’படக்குழு அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக ‘ஃபைட் கிளப்’…

The team has released the teaser of Raghava Lawrence starrer 'Pence'

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘பென்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் கதை எழுத, இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ‘ரெமோ’, ‘சுல்தான்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாளையொட்டி இதன் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், தலையில் சிவப்பு ஹெல்மெட்டுடன் திரையில் தோன்றும் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய யுனிவர்ஸுக்கு லாரன்ஸை வரவேற்கிறார். இதன் மூலம் லோகேஷின் எல்சியுவில் ஏற்கெனவே இருக்கும் கைதி டில்லி, விக்ரம், லியோ உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் இந்த ‘பென்ஸ்’ கதாபாத்திரமும் இணையும் என்று தெரிகிறது.

இதையும் படியுங்கள் : 11-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழ் – #DMDK பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஜி ஸ்குவாட் உடன் இணைந்து பேஸன் ஸ்டூடியோஸ், தி ரூட் உள்ளிட்ட நிறுவனங்களும் தயாரிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.