தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஜூன் 24 ஆம் தேதி மானிய கோரிக்கை தொடருக்கான சட்டப்பேரவை கூட்டம் தொடங்கபடவுள்ளது.
இதனை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அப்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் எனவும், எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கபப்டும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சுமார் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.







