தமிழ் நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கூடுகிறது.
இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.







