‘தக் லைஃப்’ படத்தின் ‘ஓ மாறா’ பாடல் வெளியீடு!

‘தக் லைஃப்’ படத்தின் ‘ஓ மாறா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. 

கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னம்- கமல் கூட்டணியில் தக் லைஃப் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இது வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கமல், அபிராமி, சிம்பு, த்ரிஷா என பெரும் நடிகர் பட்டாளமே இதில் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் தற்போது படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இப்படத்தின் ஜிங்குசா, சுகர் பேபி பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்  படத்தின் ‘ஓ மாறா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.