31.3 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

வெளியானது ஜவான் திரைப்படத்தின் “ஹய்யோடா” பாடல்!

ஜவான் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “ஹய்யோடா..” பாடல் தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகியுள்ளது.

பதான் வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாருக்கான் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள படம் ஜவான். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘ஜவான்’ படத்தின் ‘வந்த இடம்’ பாடல் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி அதிகமான லைக்குகளையும், பார்வைகளையும் பெற்று ஷாருக்கான் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பாடலில் ஷாருக்கானின் நடன அசைவுகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியத்தோடு, அனிருத்தின் குரலும், இசையும் பலரையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து தங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் ஷாருக்கானைப் போலவே நடனமாடி  ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இப்பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு  சமீபத்தில் வெளியிட்டது. அந்த வீடியோவில்  இப்பாடலுக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது போன்ற காட்சிகளும், ஷோபி மாஸ்டர்  ஷாருக்கானுக்கும், நடன கலைஞர்களுக்கும் நடன அசைவுகளை கற்று தருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன.  படப்பிடிப்பின் போதும் ஷாருக்கான் அனைவரிடமும் இயல்பாக நட்பு பாராட்டி பழகிய நிகழ்வுகளும் அதில் இணைத்து பகிரப்பட்டது. .

மேலும் நடிகர் ஷாருக்கானுக்கு இயக்குநர் அட்லீ தமிழ் கற்றுத் தருவதும், பின்னர் தமிழ் அர்த்தத்தை கேட்டு தெரிந்து கொண்டு அவர் அதற்கு ஏற்றார் போல் நடனத்தில் ஷாருக்கான் அசத்துவதுமான காட்சி ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் 7 செப்டம்பர் 2023 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

இந்த நிலையில் ஜவான் படத்தின் அடுத்த பாடலான ஹய்யோடா பாடல் வெளியானது. இப்பாடலை இந்தியில் பிரபல பாடகர் அர்ஜித் சிங் பாடியுள்ளார், தமிழில் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். தெலுங்கில் இப்பாடலை சின்னத்திரை நடிகை மீரா கிருஷ்ணனின் மகனும் பிரபல சூப்பர் சிங்கர் பாடகரான ஆதித்யா பாடியுள்ளார்.

இப்பாடலை தமிழில் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading