இவர் மங்காத்தா, ஜில்லா, 600028 பாகம் 2, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் XL இந்தி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவர் கடைசியாக மாருதி நகர் போலிஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது மகத் ‘காதலே காதலே’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல இயக்குனரான கே.வி ஆனந்தின் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலே காதலே படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான ஆசை பாடலின் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். ஆசை எனும் பாடலை வியன் புகழேந்தி வரிகளில் விஷால் சந்திரசேகர் பாடியுள்ளார்.






