முக்கியச் செய்திகள்சினிமா

புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெறும் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!

புதுச்சேரியில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து,  ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும், இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில், படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதுச்சேரியில் படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் 7 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள் : வேலூர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் துரை தயாநிதி – மீண்டும் நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

4 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டவருடன் ரஜினிகாந்த் சண்டையிடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரி நகரத்தை சுற்றி வருகின்றன. படப்பிடிப்பு முடிந்து கேரவேனில் இருந்து வேட்டி சட்டையுடன் ரஜினிகாந்த் இறங்கி வந்த வீடியோக்கள் தற்போது வெளியாகி, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா

Web Editor

எஸ்பிஐ வங்கி தேர்வு குறித்து சு.வெங்கடேசன் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்

Yuthi

17 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்த ‘பூ’ ராமு நடித்த படம்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading