பிரதமர் மோடி தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.
கடந்த 2001ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தொடங்கப்பட்டது. இதில் ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 2017-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் பகுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி, மெய்நிகர் காட்சி வழியே இன்று நடத்துகிறது. இந்தியா முதன்முறையாக தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோரும், மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த பல தலைவர்களும் பங்கேற்கின்றனர்.






