விராட் கோலியின் ரசிகர் ஒருவர் தனது அபிமானத்தை வித்யாசமான முறையில் நிழல் ஓவியமாக வரைந்து இணையத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீபத்தில் கலைஞரும், யூடியூபருமான ஷிந்து மவுரியா என்கிற நபர் விராட் கோலியின் ஓவியத்தை கலை நுணுக்கத்துடன் கூடிய உருவப்படமாக வரைந்து, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மவுரியா தீக்குச்சிகள் மற்றும் மெல்லிய மரக் கீற்றுகளைப் பயன்படுத்தி ஒரு வடிவத்தை உருவாக்குகிறார்.
பின்னர் அந்த வடிவத்தின் மீது ஒளியை விழ வைக்கும் போது புன்னகையுடன் கூடிய விராட் கோலியின் உருவப்படம் நமக்கு தெரிகிறது. கிட்டத்தட்ட 3 நாட்கள் உழைப்பிற்கு கிடைத்த பலனாக இந்த நிழல் ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளதோடு, இந்த விடியோவிற்கு பலரும் தனது லைக்குகளை பகிர்ந்து பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் விராட் கோலிக்கு இந்த வீடியோவை டேக் செய்துள்ள நிலையில், இதற்கு விராட் எப்படி பதில் அளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- பி.ஜேம்ஸ் லிசா







