மழையால் வீழ்ச்சியடைந்த மல்லிகைப்பூவின் விலை! சென்ற வார விலை கிலோ ரூ.1600; இந்த வார விலை கிலோ ரூ.600

மழையின் காரணமாக பூக்களின் விலை அடிமட்டத்திற்கு சென்றுள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். மல்லி கடந்த வாரம் ஒரு கிலோ 1600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 1000 ரூபாய் குறைந்து 600 ரூபாயாக…

மழையின் காரணமாக பூக்களின் விலை அடிமட்டத்திற்கு சென்றுள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

மல்லி கடந்த வாரம் ஒரு கிலோ 1600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 1000 ரூபாய் குறைந்து 600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சம்பங்கி பூ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று அதன் விலை பாதியாக குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முல்லை கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 400 ரூபாய் குறைந்து 200 ரூபாக்கு விற்பனை செய்யப்டுகறது. ரோஜா 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 100 ரூபாய் குறைந்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அரளி பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்து நிலையில் இன்று 30 ரூபாய் குறைந்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வருகிறது. ஐஸ் முல்லை 200 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 150 ரூபாய் குறைந்து 50 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று பாதியாக குறைந்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாமந்திப்பூ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 ரூபாய் குறைந்த 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமாக மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து அதிகரித்து பூக்களின் விலையானது குறைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்து இருந்த நிலையில் தற்போது மழையின் காரணமாக பூக்கள் விலை மிகவும் சரிந்துள்ளது.

பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை குறைந்துள்ளது. மழையின் காரணத்தினால் பூக்கள் பெரும்பாலும் விற்பனை ஆக வில்லை என வியாபாரிகள் கவலை. புரட்டாசி மாதம் தொடங்க இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்கக்கூடும் என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.