வணிக எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக 171 ரூபாய் குறைப்பு..!!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 171 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு…

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 171 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் 1-ஆ ம் தேதியன்று வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிரடியாக 351 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஆனால், ஏப். 1- ம் தேதியன்று வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூபாய் 76 குறைக்கப்பட்டது. இதனால், கடந்த ஒருமாதமாக அதன் விலை 2192.50 ஆக இருந்து வந்தது.

இந்த நிலையில் மே மாதம் முதல் தேதியான இன்று, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 192 ரூபாய் 50 காசுகளாக இருந்து சிலிண்டரின் விலை 171 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 21 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.