பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார்: தடுக்க முயன்ற ஆதரவாளர்களை விரட்டியடித்ததால் பதற்றம்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வீட்டிற்குள் அந்நாட்டு போலீசார் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் 2018-ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தின் போது…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வீட்டிற்குள் அந்நாட்டு போலீசார் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் 2018-ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தின் போது பரிசாக பெற்ற பொருட்களை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல், தனது சொந்த கணக்கில் சேர்த்தது, பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காவல்துறை, நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 9 வழக்குகள் இம்ரான் கான் மீது உள்ளது. இந்த வழக்குகள் பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று தன் மீதான குற்றச்சாட்டுகளுக்க பதிலளிக்க கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு சம்மன் அனுப்பியது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் கானும் லாகூரில் உள்ள ஜமன் பூங்கா இல்லத்தில் இருந்து, இஸ்லாபாத் நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டில் மனைவி புஷ்ரா பேகம் மட்டும் இருந்துள்ளார்.

இந்த சமயத்தில், இம்ரான் கானின் வீட்டின் முன்பக்க கேட் மற்றும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, அவரை கைது செய்ய வந்தாக கூறி, வீட்டிற்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தனர். இதையறிந்த இம்ரான் கானின் ஆதரவாளர்கள், அவரது வீட்டை முற்றுகையிட்டு, காவல்துறையினர் வீட்டிற்குள் செல்லாமல் தடுக்க முயற்சித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. தடியடியால் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இம்ரான் கான் தன் மீதான வழக்குகளுக்கு முன் ஜாமீன் கேட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இம்ரான் கானுக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழக்கி உத்தரவிட்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த சந்தோஷமடைந்ததோடு, கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.

https://twitter.com/ImranKhanPTI/status/1636993630673031169?s=20

இதற்கிடையில் தனது மனைவி புஷ்ரா பேகம் தனியாக இருக்கும் ஜமான் பூங்காவில் உள்ள எனது வீட்டின் மீது பஞ்சாப் போலீசார் தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எந்த சட்டத்தின் கீழ் இதைச் செய்கிறார்கள்? என்பது எனக்கு புரியவில்லை என இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.