ஆஸ்கர் விருது பெற்றவர்களை பாராட்டிய ஆஸ்கர் நாயகன்!

நாட்டு நாட்டு பாடல் மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது  வாங்கியவர்களை முன்னாள் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகமாக…

நாட்டு நாட்டு பாடல் மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது  வாங்கியவர்களை முன்னாள் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகமாக நடைபெற்றது. வண்ணமயமான அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றனர். 2009ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு கீரவாணியின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

அதேபோல தமிழ்நாட்டின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி தம்பதியான பொம்மன், பெள்ளி ஆகியோரின் கதையான “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” எனும் படம் ஆஸ்கர் விருதினை வாங்கியதன் மூலம் உலகம் முழுக்க கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்  ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் “ ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதும் , மிகவும் தகுதியான ஆஸ்கர் விருது ஆர்ஆர்ஆர்  படத்திற்கு வழங்கப்பட்டுள்ளதற்கு இசையமைப்பாளர் கீரவாணிக்கும் , இயக்குநர் ராஜமௌலிக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

அதே போல “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” ஆவண குறும்படத்தை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகி கோன்சால்வேஸ் மற்றும் குனீத் முங்காவிற்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் “ இந்திய திரைத் துறையினருக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழ்கிறீர்கள் உங்களுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.