கடந்த 1996-2001 ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கிலிருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரை கடந்த 2007ம் ஆண்டு விடுதலை செய்தது வேலூர் நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது.
இந்நிலையில் வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்து சாட்சி விசாரணையைத் துவங்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







