கங்குவா திரைப்படத்தின் புதியபோஸ்டரை மாலை 5 மணி அளவில் படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது 48 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காக அவர் தற்போது நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் முன்னோட்ட வீடியோவை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஸ்பெஷல் போஸ்டருடன் வெளியிட்டது.
தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக வெளியாக இருப்பது ‘கங்குவா’ படம். சூர்யா நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்தப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். தொடர்ச்சியாக பேமிலி டிராமா படங்களை இயக்கி கமர்ஷியல்ரீதியாக தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த இயக்குநர் சிவா, தற்போது முதன்முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ள ‘கங்குவா’ படத்தினை தனது பாணியிலிருந்து முற்றிலும் வேறு விதமாக இயக்கி வருகிறார்.








