லால் சலாமை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்ட விஷ்ணு விஷால், பல போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். அவர் காலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கிரிக்கெட்டிலிருந்து விலகினார்.
அதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘இன்று நேற்று நாளை’, ‘ஜீவா’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ராட்சசனைத் தொடர்ந்து 2022-ல் வெளிவந்த ‘கட்டா குஸ்தி’-யும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ‘மொய்தீன் பாய்’ என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது.
https://twitter.com/TheVishnuVishal/status/1754096724543721657
இந்நிலையில், விஷ்ணு விஷாலின் அடுத்த படத்திற்கான அப்டேட்டை அவர் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் புதிய படத்தில் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.







