”தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்” – நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம், சங்கத்…

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம், சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் சங்கப் பொருளாளர் விஷால், கார்த்தி,பூச்சி முருகன், செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது, மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு நடிகர் சங்கம் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால்
மற்றும் கார்த்தி, பூச்சி முருகன் இணைந்து செய்தியாளர் சந்தித்தனர்.

அப்போது  நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் பேசியதாவது:

இரண்டாவது முறையாக எங்களை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் எங்கள் மீது சங்கத்தினருக்கு உள்ள நம்பிக்கை தான். நாங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி விட்டோம் கடைசி கோரிக்கை கட்டடம் மட்டும் தான் அதையும் விரைவாக நிறைவேற்றுவோம்.

நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு தடையாக இருந்த அனைத்து சட்டச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விட்டது. அடுத்த ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் புதிய கட்டடத்தில் நடைபெறும். இவ்வாறு நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.