முக்கியச் செய்திகள்சினிமா

“விஜய், நான் நேரில் பார்த்த லெஜண்ட்” – லியோ பட வெற்றி விழாவில் மிஷ்கின் புகழாரம்!

“நான் நேரில் பார்த்த லெஜண்ட் விஜய்” என இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் பேசியுள்ளார்.  

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ. 540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் பேசியதாவது:

“நான் நேரில் பார்த்த லெஜண்ட் விஜய்.  திரையுலகில் லெஜண்ட்ஸ் மைக்கேல் ஜாக்சன், புருஸ்லீதான். விஜய்யோடு இருப்பவர் வாழ்வார்களே தவிர வீழ மாட்டார்கள் என போஸ்டர் ஒட்டியவர் 100 ஆண்டு காலம் வாழவேண்டும்.  நடிகர் விஜய்க்காக எனது நெஞ்சை கூட அறுத்து கொடுப்பேன்” என லியோ’ பட வெற்றி விழாவில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழகம் முழுவதும் 847 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிப்பு!

Halley Karthik

8ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சென்னை மெட்ரோ ரயில் சேவை!

Web Editor

இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்ஸூக்கு பிரதமர் மோடி வாழ்த்து

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading