முக்கியச் செய்திகள் சினிமா

‘தி லெஜண்ட் சரவணா’ கன்னட ட்ரையிலர் இன்று வெளியீடு

‘தி லெஜண்ட் சரவணா’ திரைப்படத்தின் கன்னடி ட்ரையிலரை நடிகை ராய்லெட்சுமி இன்று மாலை 4  மணிக்கு வெளியிடவுள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளரான இவர் சினிமாவில் கால் பதித்துள்ள முதல் படம் ‘தி லெஜண்ட்’. ஜே.டி – ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, மறைந்த விவேக், பிரபு, நாசர், விஜயகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தை லெஜண்ட் சரவணாவே பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படத்தின் மோசன் போஸ்டர், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் சரவணன். தி லெஜண்ட் சரவணா படம் இந்த மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் படத்தை வருகின்ற 28ம் தேதி வெளியிட போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் தி லெஜண்ட் சரவணா திரைப்படத்தின் கன்னட ட்ரையிலரை நடிகை ராய்லெட்சுமி இன்று மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளார். இந்த படத்தின் தெலுங்கு ட்ரையிலரை நடிகை தமன்னா நேற்று வெளியிட்டார். இதேபோல் தமிழ், மலையாளம் மொழிகளில் தயாராகியுள்ள ட்ரையிலர் ஏற்கனவே வெளியாகியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கணவன்

G SaravanaKumar

மொத்த கதையும் தூள் தூளா கிழிஞ்சிடுச்சி!

Vel Prasanth

பறவை, அணில்களுக்கும் பசிக்குமில்ல.. வைரலாகும் மாணவர்களின் செயல்!

எல்.ரேணுகாதேவி