‘தி லெஜன்ட்’ மலையாள ட்ரெய்லர்; மாலை 05.30 மணிக்கு வெளியாகிறது

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜன்ட் மலையாள ட்ரெய்லர் இன்று மாலை 05.30 மணிக்கு வெளியாகிறது. தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ்…

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜன்ட் மலையாள ட்ரெய்லர் இன்று மாலை 05.30 மணிக்கு வெளியாகிறது.

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜன்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தி லெஜண்ட் படத்திலிருந்து வெளிவந்த மொசலோ மொசலு பாடல் மற்றும் வாடி வாசல் வீடியோ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தென்னிந்தியத் திரை உலகில் முன்னணி நட்சத்திர நாயகிகள் பலரும் கலந்து கொண்ட தி லெஜண்ட் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது அப்போது தி லெஜண்ட் திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரைலர் வெளியானது.

அண்மைச் செய்தி: ‘எம்.பி ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கை இல்லை; முரசொலி கேள்வி’

இந்நிலையில், இன்று அதிகாரப்பூர்வ மலையாள ட்ரெய்லர் மாலை 05.30 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/_TheLegendMovie/status/1546523900984455168

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.