35.7 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ – 17 நாட்களில் செய்த சாதனை!

பெரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. படம் வெளியாகி 17 நாட்களில் ரூ.200 கோடியை எட்டி சாதனை படைக்க உள்ளது.

சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான  ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தவிர இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால், சத்தியம் திரையரங்கம் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து படம் திரையிடப்பட்ட முதல் நாள் அன்றே படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி திரையிடப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பெரிய எதிர்ப்புக்கு மத்தியில் மே 5 ஆம் தேதி வெளியான “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டியது. படம் வெளியான முதல் 6 நாட்களில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ₹68.86 கோடி வசூலித்திருந்தது. படம் வெளியான முதல் நாள் வெள்ளிகிழமை ரூ.8.03 கோடி வசூல் ஆன நிலையில், சனிகிழமை ரூ.11.22 கோடி, ஞாயிற்றுக்கிழமை ரூ.16.40 கோடி, திங்கள்கிழமை ரூ.10.07 கோடி, செவ்வாய்க்கிழம ரூ.11.12 கோடி என தொடர்ந்து புதன்கிழமை வரை ₹ 68.86 கோடி வசூல் ஈட்டியது.இதற்கு பிறகு முதல் வார வசூல் ரூ.81.14 கோடியானது. இதன் பிறகு ஒன்பது நாட்களில் ரூ.100 கோடியை எட்டியது.

இதனை தொடர்ந்து, 11 ஆம் நாள் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 10 கோடி வசூலித்தது. இந்த வசூல் மற்ற நாட்களை விட குறைவு என்றாலும், இப்படத்தின் மொத்த வசூல் ரூ 146.74 கோடியாக இருந்தது. இதனை தொடர்ந்து , தி கேரளா ஸ்டோரி அதன் மூன்றாவது வார இறுதியில் கூட, பெரும் வசூலைக் கண்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் , 11 கோடி ரூபாய் வசூலித்தது. தற்போது 17 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும், இப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் இப்போது ரூ.198. 47 கோடியாக உள்ளது. இதே வேகத்தில் தொடர்ந்தால் சர்ச்சைக்குரிய இப்படம் இன்று ரூ.200 கோடியை தாண்டும் வாய்ப்புள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading