கடலில் குதித்து வானிலை நிலவரத்தை வழங்கிய செய்தியாளர் தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
அதிதீவிர சூறாவளி புயலாக உருமாறிய, ‘பிபர்ஜாய்’ குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரை கடந்த போது மணிக்கு 125 கி.மீ., வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சம் பேர் வரையில் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும் ஏராளமான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தற்போது மீட்பு பணியை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இதனிடையே பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவர், புயல் குறித்த நிலவரத்தை கூறிக்கொண்டிருந்தார்.
Indian Journos should learn from this reporter in Pakistan. #Cyclone pic.twitter.com/8e1UwscmoZ
— Swapnil 𓅄 (@swapnilnarendra) June 15, 2023
திடீரென கடலில் குதித்த அவர், தொடர்ந்து வானிலை நிலவரத்தை கூறிக்கொண்டே இருந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.







