மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம்; ஓட்டுநர், நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் ஏற்ற மறுத்த அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் சிங்கத்தாகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் பொற்றுத்தாய், நாகராஜ்…

மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் ஏற்ற மறுத்த அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் சிங்கத்தாகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் பொற்றுத்தாய், நாகராஜ் திருச்செந்தூர்.

இவர்கள் இருவரும் கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தூத்துக்குடி செல்வதற்காக மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறினர். அப்போது ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தில் இருவரையும் ஏற்ற மறுத்து அவர்களை இறக்கிவிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் மாற்றுத்திறனாளிகளின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவதூறாகப் பேசி பேருந்திலிருந்து இறக்கி விட்டதாகப் புகார் எழுந்தது. அத்துடன், மனமுடைந்த மாற்றுத் திறனாளிகள் அரசுக்கு வீடியோ மூலம் நீதி கேட்டு கோரிக்கை வைத்தனர். அந்த வீடியோ பதிவில், அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த செய்தியை காணொளியாக காண:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.