முக்கியச் செய்திகள் உலகம் Instagram News

எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ள புவியின் உள் மையம்!

பூமியின் உள் மையமானது எதிர் திசையில் சுழலத் தொடங்கியியுள்ளது என ஆய்வு கூறுகிறது.

நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், கடந்த ஆறு தசாப்தங்களாக (60 ஆண்டுகள்) நடைபெற்ற நிலநடுக்கங்களிலிருந்து நில அதிர்வு அலைகள் வறை ஆய்வு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பூமியின் உள் மையம், சூடான மாக்மா அதன் வழக்கமான சுழற்சியை நிறுத்தி, எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது. பூமியின் மையமானது நாம் வாழும் மேற்பரப்பிலிருந்து தோராயமாக 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) கீழே உள்ளது. இதை “கிரகத்திற்குள் உள்ள கிரகம்” என அழைக்கப்படும் இந்த திரவ உலோக மையம் தானாகச் சுழலக் கூடிய அமைப்பாக உள்ளது என AFP அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த உள் மையமானது எவ்வாறு சுழல்கிறது என்பது விஞ்ஞானிகளிடையே விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. மேலும் இந்த சமீபத்திய ஆராய்ச்சி சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்றும் பல ஆராய்ச்சியாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பூகம்பங்கள் அல்லது சில சமயங்களில் அணு வெடிப்புகளால் உருவாக்கப்பட்ட நில அதிர்வு அலைகள் பூமியின் நடுவில் செல்லும் போது அதன் சிறிய வேறுபாடுகளை அளவிடுவதன் மூலம் உள் மையத்தின் தன்மை பற்றி நமக்குத் தெரியாதவராவதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக நிலநடுக்கங்களிலிருந்து நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்தது புவியின் உள் மையத்தின் இயக்கங்களைக் கண்காணிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர்.

 

இந்த ஆய்வின் ஆசிரியர்களான, சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சியாடோங் சாங் மற்றும் யி யாங் ஆகியோர், உள் மையத்தின் சுழற்சி “2009 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியுள்ளது” என்று கண்டறிந்தனர்.

“பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சலைப் போல சுழல்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். “இந்த ஒரு சுழற்சி சுமார் ஏழு தசாப்தங்கள் ஆகும்”, அதாவது ஒவ்வொரு 35 வருடங்களுக்கும் இது திசையை மாற்றுகிறது, என்றும் அவர்கள் கூறினர்.

1970 களின் முற்பகுதியில் இது திசை சுழற்சியாக்க மாறியதாகவும், அடுத்த சுழற்சி மாற்றம் 2040 களின் நடுப்பகுதியில் இருக்கும் என்றும் அவர்கள் கனித்துள்ளனர்.

இந்த உள் மைய சுழற்சியின் தலைகீழ் மாற்றமானது ஒரு வருடத்தில் ஒரு மில்லி வினாடியின் ஒரு பகுதியால் நாளின் நீளத்தை குறைக்கும். மேலும் பூமியின் காந்தப்புலத்தில் சிறிய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

“எங்களின் இந்த ஆய்வு சில ஆராய்ச்சியாளர்களை முழு பூமியையும் ஒரு ஒருங்கிணைந்த இயக்கவியல் அமைப்பாகக் கருதும் மாதிரிகளை உருவாக்க மற்றும் அதனைச் சோதிக்க ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்தின் சிறப்பம்சங்கள்..

EZHILARASAN D

ஆளுநர் முன் முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது- இபிஎஸ்

Jayasheeba

நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் – சோனியா காந்தி நம்பிக்கை

Dinesh A