மனைவியை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவன் | ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றம்,  2020 ஆம் ஆண்டில் தனது மனைவியைக் கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அமெரிக்க செய்தித்தாள் தி சன் சென்டினலின் அறிக்கைப்படி,  2020 ஆம்…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றம்,  2020 ஆம் ஆண்டில் தனது மனைவியைக் கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்க செய்தித்தாள் தி சன் சென்டினலின் அறிக்கைப்படி,  2020 ஆம் ஆண்டில்,  குற்றம்சாட்டப்பட்ட பிலிப் மேத்யூ தனது செவிலியர் மனைவி மரியான் ஜாயின் (26) காரை மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் வழிமறித்து,  17 முறை கத்தியால் குத்திவிட்டு ஜாய்யின் உடல் மீது காரை ஏற்றியுள்ளார்.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர்.

இந்த வழக்கு வெகு நாட்களாக நடந்து வந்த நிலயில்,  தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  கூடுதலாக, அவர் தனது மனைவியை பயங்கரமான ஆயுதத்தால் மோசமாகத் தாக்கியதற்காக அதிகபட்சமாக மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.