ஒரு வழியாக முடிவுக்கு வந்த பாகிஸ்தான் அரசு… இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் விளையாட அனுமதி!

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் கோட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் பங்கேற்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியாகியுள்ளது.   நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை  2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை,…

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் கோட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் பங்கேற்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியாகியுள்ளது.

 

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை  2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை தொடருக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற பாகிஸ்தான் அணி ஐசிசியிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அதனை ஐசிசி  நிராகரித்தை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவித்தது.

எனவே, பாகிஸ்தான் அணி இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் மைதானங்கள், அவர்களுக்கு செய்யப்படும் பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவத்துடன் பாதுகாப்புக் குழு இந்தியா வந்து இதுகுறித்த சோதனைகளில் ஈடுபட்டது. பாகிஸ்தான் அணிக்கான தூதுக்குழு இந்தியாவில் உள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு குறித்து கலந்துரையாடி ஆய்வு செய்தது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை அக்டோபர் 14-ம் தேதிக்கு மாற்ற வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அக்டோபர் 15-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் அன்று நவராத்திரி தினத்தையொட்டி பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கும் என்பதால் தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாட வருவதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை என்ற வகையில் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:

“விளையாட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, வரவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இல் பங்கேற்க தனது கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் நிலை சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக்கூடாது என்று பாகிஸ்தான் நம்புகிறது.

ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அணி மறுத்ததால், பாகிஸ்தானின் இந்த முடிவை எடுத்தது.

இருப்பினும் பாகிஸ்தான் தனது கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து முழு கவனம் கொண்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய பயணத்தின்போது முழு பாதுகாப்பு குறித்து இந்தியா உறுதி செய்யும் என்று நம்புகிறோம்.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.