‘மாமா’ என்றழைத்து விஜய்சேதுபதியை முத்தமிட்ட சிறுமிகள்!

சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நடிகர் விஜய் சேதுபதியை பாசத்தோடு மாமா என்று அன்போடு அழைத்து சிறுமிகள் முத்தமிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக ‘மகாராஜா’ படத்தை குரங்கு பொம்மை திரைப்படத்தை…

சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நடிகர் விஜய் சேதுபதியை பாசத்தோடு மாமா என்று அன்போடு அழைத்து சிறுமிகள் முத்தமிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக ‘மகாராஜா’ படத்தை குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.  இப்படத்தில் அனுராக் காஷ்யப்,  மம்தா மோகன்தாஸ்,  நட்டி,  முனிஷ்காந்த்,  சிங்கம் புலி,  பாரதிராஜா, வினோத் சாகர்,  பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில், ‘மகாராஜா’  திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 1915க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான உயிரினம்! – தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வீடியோ!

இந்நிலையில்,  சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படம் மகாராஜா திரைப்பட்டுள்ளது.  இதையடுத்து, திரையரங்கில் வெளியிடப்பட்ட முதல் காட்சியை நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களோடு கண்டு களித்தார்.  ரசிகர்களுடன் சேர்ந்து திரைப்படத்தை பார்த்த விஜய்சேதுபதி கேக் வெட்டி 50 வது திரைப்படத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

மேலும்,  ரசிகர்கள் பலர் விஜய்சேதுபதியோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.  திரையங்கில் இரு சிறுமி விஜய் சேதுபதியை மாமா என்று அழைத்த நிலையில்,  விஜய் சேதுபதி குழந்தைகளுக்கு முத்தமிட்டார்.  குழந்தைகளும் விஜய் சேதுபதி கண்ணத்தில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.