ரீல்ஸ் மோகத்தால் அந்தரத்தில் தொங்கிய பெண் – வீடியோ வைரல்!

ரீல்ஸ் செய்யும் ஆர்வத்தில் பெண் ஒருவர் ஆபத்தை உணராமல் அந்தரத்தில் தொங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் காணொலிகளை வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.   இந்த காணொலிகளுக்கு சமூக…

ரீல்ஸ் செய்யும் ஆர்வத்தில் பெண் ஒருவர் ஆபத்தை உணராமல் அந்தரத்தில் தொங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் காணொலிகளை வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.   இந்த காணொலிகளுக்கு சமூக வலைதளத்தில் அதிகமான லைக்குகள் கிடைப்பதால் பலர் ஆர்வமுடன் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

சினிமா பாடலுக்கு நடனமாடுவது,  சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.  அதே நேரத்தில் சிலர் ரீல்ஸ்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அந்த வகையான  வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,  மகாராஷ்ரா மாநிலம் புனேவில் உள்ள பழமையான கட்டிடத்தின் மேற் பகுதியில் பெண் ஒருவர் இளைஞரின் கையை பிடித்துக் கொண்டு கீழே தொங்கியவாறு இருக்கிறார்.  இரண்டு இளைஞர்கள் இந்த காட்சிகளை வீடியோ பதிவு செய்கின்றனர்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் அதே நேரத்தில் இணையவாசிகள் பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.