தென்மாவட்டங்களை உருக்குலைத்த வெள்ளம் | புன்னைக்காயல் கிராமம் மீள்வது எப்போது? | களத்தில் நியூஸ் 7 தமிழ்!

வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள புன்னைக்காயல் மீனவ கிராமத்திற்கு நியூஸ் 7 தமிழ் குழு கடல் வழியாக சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தது. இதுதொடர்பான சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி…

வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள புன்னைக்காயல் மீனவ கிராமத்திற்கு நியூஸ் 7 தமிழ் குழு கடல் வழியாக சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தது. இதுதொடர்பான சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்….

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை முழுவதுமாக வெள்ள நீரில் சூழப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஜேசிபி வாகனத்தில் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றாலும் அனைத்து மக்களுக்கும் இன்னும் உதவிகள் சென்று சேராத நிலையே நீடிக்கிறது.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவ கிராமத்தில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி வெள்ள நீர் புன்னக்காயல் பகுதியில் சென்று கடலில் கலக்கும் நிலை அங்கு உள்ளது. இதன்காரணமாக, அதிகப்படியான வெள்ளம் அவ்வழியே செல்வதால், புன்னக்காயல் மீனவ கிராமம் தனித்தீவு போல துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழையின் போது,  தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் பகுதியை வெள்ளம் சூழ்ந்தது.  அப்போது, கைகளால் முகத்துவாரத்தை சரி செய்த காரணத்தால் தான் தங்கள் கிராமம் தப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அத்துடன் 8 கிமீட்டர் தூரம் கடல் வழியாப பயணம் செய்து புன்னைகாயல் மக்களின் துயரத்தை பதிவு செய்தது நியூஸ் 7 தமிழ் குழு .

உணவு,  தண்ணீர்,  பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவர்கள் தவித்து வருவதாகவும், அரசு சார்பில் எந்த உதவியும் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டிய அவர்கள் தங்களுக்கான உதவிகளை கோரி நியூஸ்7 தமிழ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த முழு செய்தியை காணெளியாக காண:  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.