அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் அருண் விஜய் நடித்து வரும் ரெட்ட தல படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து…

நடிகர் அருண் விஜய் நடித்து வரும் ரெட்ட தல படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்த மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான், பார்டர் போன்ற திரைப்படங்களில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து அருண் விஜய்யின் 36வது படமான ரெட்ட தல படத்தை மான் கராத்தே இயக்குநர் திருக்குமரன் இயக்கி வருகிறார்.

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு சாம் CS இசையமைக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக சித்தி இத்வானி நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இரட்டை வேடங்களில் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் அருண் விஜய் கார் ஓட்டியபடி அமர்ந்திருக்கும் காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.