லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்படிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ அக். 10-ம் தேதி ரிலீஸாகிறது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘கூலி’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாக கூறிப்படுகிறது. மேலும், தங்கத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது. இதனால், இந்த திரைப்படம் தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : ரயில் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! – டெல்லியில் பரபரப்பு!
இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்படிப்பு ஜூலை மாதத்தில் சென்னை அல்லது ஹைதராபாத்தில் துவங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தயாரிக்கபடுவதால், பிரம்மாண்ட காட்சிகளை எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.








