தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்போடு உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷிபடுத்தி உள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.இந்த படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி பிலீம்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
https://twitter.com/SathyaJyothi/status/1674742220552015872?s=08







