பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படியுங்கள் : நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு! தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால், வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வர உள்ளதால் இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.








