7 நாளில் ரூ.300 கோடியை கடந்து வசூல் செய்த ‘டன்கி’ திரைப்படம்! 

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘டன்கி’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் ரூ.300 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது. அண்மையில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் மற்றும் பதான் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு…

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘டன்கி’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் ரூ.300 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது.

அண்மையில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் மற்றும் பதான் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது  ‘டன்கி’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். இதில் டாப்ஸி, விக்கி கௌஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள் : பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் விஜயகாந்த் இறுதி பயணம் தொடங்கியது!

உலகளவில் வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுது. இந்நிலையில், படம் வெளியான 7 நாட்களில் ரூ.305 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.