ஜவான் திரைப்படத்தின் மூன்றாம் பாடலை வெளியிட்ட படக்குழு! சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆக்கி வரும் ரசிகர்கள்!

ஜவான் திரைப்படத்தின் மூன்றாம் பாடலை படக்குழு வெளியிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப்…

ஜவான் திரைப்படத்தின் மூன்றாம் பாடலை படக்குழு வெளியிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்.7-ம் தேதி இப்படம் வெளியாகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் அட்லியுடன் இணைந்து ஏற்கனவே ஷாருக்கான் பார்த்தார்.

அனிருத் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிலையில், நாளை (ஆகஸ்ட் 30) சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜவான் படத்தின் மூன்றாம் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகியுள்ளது. ராமையா வஸ்தாவையா எனத்தொடங்கும் இந்த பாடல் குறித்து ரசிகர்கள் வெகுவாக பாராட்டி தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.