மகனை அவர்களது நண்பர்களே கொன்றுவிட்டதாக தந்தை போலீஸில் புகார்

மகனை அவரது நண்பர்களே கொலை செய்துவிட்டதாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தந்தை ஒருவர் புகார் அளித்துள்ளார். ஈரோடு அருகேயுள்ள சூரம்பட்டி அண்ணாவீதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை…

மகனை அவரது நண்பர்களே கொலை செய்துவிட்டதாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தந்தை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு அருகேயுள்ள சூரம்பட்டி அண்ணாவீதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஜனவரி 27ம் தேதி தனது மகன் சின்னையா விபத்தில் இறந்து விட்டதாக அவரது நண்பர் சந்தோஷ்குமார் எனக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், எனது மகன் விபத்தில் இறந்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. இதையடுத்து நண்பர்களிடையே விசாரித்த போது எனது மகனுக்கும், சந்தோஷ்குமாருக்கும் முன்விரோதம் இருந்தது. இதனால், எனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வெள்ளோடு காவல்துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply