‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

‘கேப்டன் மில்லர்’  படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று பாணியில்…

‘கேப்டன் மில்லர்’  படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.இந்த படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அண்மையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டிருந்தார். இந்த கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என பேசப்பட்டது.

அந்த வகையில்,  ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர், அவரது பிறந்தநாளையொட்டி நள்ளிரவில்  வெளியானது.  டீசரின் தொடக்கம் முதல் இறுதி வரை துப்பாக்கி குண்டுகள் சத்தம் தெறிக்கிறது. மேலும் யூடியூபில் இந்த டீசர் 3 கோடி பார்வைகளை கடந்து  உள்ளது.

அத்துடன்  இப்படத்தின் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்ததாகவும் மற்ற நடிகர்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக ஊட்டியில்  நடைபெற்று
வருவதாகவும், இன்னும் இரண்டு வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் பாடல் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். அதில், “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மழ குவியும்…பாடல் விரைவில்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 15ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.