பிரபல நடிகை சாரா அலிகான் தனது தோழியுடன் மும்பை கடற்கரையில் ஹாயாக நடந்து சென்றது மற்றும் ஆட்டோவில் சென்ற வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.
பிரபலங்களுக்கு மக்களிடையே இருக்கும் மவுசு விவரிக்க முடியாதது. பிரபலங்களுக்கு கிடைக்கும் மரியாதையை கண்டு நாமும் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் பிரைவசி கிடைக்காமல் தவிப்பதாக பல்வேறு பிரபலங்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். சில தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பர்தா, ஹெல்மெட் அணிந்து கொண்டு நகரில் உலா வருவதுண்டு. அதனையும் மீறி அவர்களை ரசிகர்கள் அடையாளம் கண்டு மொய்த்த சம்பவம் அதிகம் உண்டு.
இந்நிலையில் பிரபல நடிகை சாரா அலிகான் தனது தோழியுடன் மும்பை கடற்கரையில் உலா சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சாரா கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஷார்ட்ஸ், டி-சர்ட் அணிந்து நடந்து செல்கிறார். அவரது தோழியும், ஆடை வடிவமைப்பாளருமான தன்யா கவ்ரி உடன் செல்கிறார். அவர்களை சிலர் அடையாளம் கண்டதால் அவர்களுக்கு ஹாய் சொல்லியபடி நடந்து செல்கின்றனர். பின்னர் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு செல்கின்றனர்.சைஃப் அலிகான், அம்ரிதா சிங்கின் மகளான சாரா அலிகான் 2018 ஆம் ஆண்டு கேதார்நாத் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.






