ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து – சென்டர் மீடியேட்டரில் ஏறி நிற்கும் டிரெய்லர் லாரி!

ஸ்ரீபெரும்புதூர் அருகே டிரெய்லர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியேட்டரில் ஏறி விபத்துக்குள்ளானது.  இதனால் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை, செய்யாறிலிருந்து காம்பவுண்ட் சுவர் கற்கள் ஏற்றிச்சென்ற…

ஸ்ரீபெரும்புதூர் அருகே டிரெய்லர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சென்டர்
மீடியேட்டரில் ஏறி விபத்துக்குள்ளானது.  இதனால் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை, செய்யாறிலிருந்து காம்பவுண்ட் சுவர் கற்கள் ஏற்றிச்சென்ற 60 அடி நீளம் கொண்ட ராட்சத டிரெய்லர் லாரி போரூரில் கற்களை இறக்கிவிட்டு,
குன்றத்தூர் வழியாக செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது
ஸ்ரீபெரும்புதூர் அருகே குன்றத்தூர் சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் ஏறி நின்றது.

இந்த விபத்தில் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஊற்றியது. விபத்து ஏற்பட்ட உடனே லாரி ஓட்டுநர் சாமர்த்தியமாக  லாரியை ஆப் செய்ததால் பெரிய அசம்பாவிதம் ஏதும் நேராமல்  தவிர்க்கப்பட்டது

60அடி நீளம் கொண்ட டிரெய்லர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள
தடுப்பில் ஏறி விபத்துக்குள்ளானதால் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையில்
சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.