29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

அவன் போறான் ஃப்ளைட்டுலா; இப்போ பறந்து புட்டான் ஹைட்டு’ல – துருவ நட்சத்திரம் 2-வது சிங்கிள் எப்போது?

விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இது குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் வெளிவந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே சீயான் விக்ரம் – இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில்  ஆக்சன் திரில்லர் படமாக தயாராகிருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். கடந்த 2016ம் ஆண்டு தயாராகிய துருவ நட்சத்திரம் திரைப்படம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு நின்றது. 6 ஆண்டுகளாக வெவ்வேறு கட்டங்களாக நடைபெற்ற துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதத்தில் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்தும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் மட்டும் இப்போதும் குறையவில்லை. ஒவ்வொரு முறை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போதும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த கேள்விகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு கொண்டு தான் இருந்தன. கடந்த ஆண்டு சிலம்பரசன் நடித்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை, வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார்.

என்டர்டைன்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் , கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்  பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார்,  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு  இசையமைத்துள்ளார். சமீபத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாகவும் தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் அறிவித்தனர்.

Image

 

எனவே விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியானது. “ஹிஸ் நேம் இஸ் ஜான்” என்ற துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading