30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் வணிகம்

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 35% குறைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்!

எரிபொருள் மீது மத்திய அரசு இரக்கமற்ற முறையில் வரி விதித்து லாபம் ஈட்டுவதாகவும், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 35% குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய பாஜக அரசு பெட்ரோல் மீதான கலால் வரி 116% மற்றும் டீசல் மீதான கலால் வரி 357% அதிகமாக விதித்துள்ளது. எரிபொருள் மீதான வரிகளை தொடா்ந்து உயா்த்தியதன் பலனாக, கடந்த 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு பொதுமக்களிடம் இருந்து ரூ.32 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாய் திரட்டியுள்ளது.

கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல் தயாரிக்க பயன்படும் கச்சா எண்ணெய் விலை 35% குறைந்துள்ளது. ஆனாலும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு அதிகமாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.90-க்கு மேலாகவும் உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோதிலும், அதன் பலன்களை நாட்டு மக்களுக்கு வழங்காமல், பெட்ரோல்-டீசல் மீது வரி விதித்து மத்திய அரசு இரக்கமின்றி லாபம் ஈட்டுகிறது.

இந்நிலையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அளவுக்கு பெட்ரோல்-டீசல் மீதான வரி விகிதங்களை குறைத்து, அவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.30 குறைத்து பொதுமக்களின் சுமையை மத்திய அரசு குறைக்கலாம். சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளதற்கு ஏற்ப, பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு 35% குறைக்க வேண்டும்”

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading