விமான பயணத்தின் போது சக பயணிகள் மீது சிறுநீர் கழிக்கும் சம்பவங்கள் தடுக்க
தொடரப்பட்ட மனு மீது பதில் அளிக்க மத்திய அரசு, விமான போக்குவரத்து இயக்குனரகம் மற்றும் விமான நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 72 வயது பெண்
மீது சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சையானது, இது
தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கும் சூழலில்
பாதிக்கப்பட்ட பெண் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்
அதில் இத்தகைய சிறுநீர் கழிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எனவே
விமான பயணத்தின்போது இத்தகைய சம்பவங்களை தவிர்க்கும் வகையில் நிலையான
செயல்பாட்டு வழிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை
வைத்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்த
போது இந்த , விவகாரத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் மேத்தா நீதிமன்றத்திற்கு உதவ
வேண்டும் என்றும் அதே நேரத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம்
மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் அனைத்து விமான நிறுவனங்கள்
பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூலை மாதம்
இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவித்தார்.







