பஞ்சாபில் ஒரே கட்டமாகவும், உத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ள 16 மாவட்டங்களிலும் பிரச்சாரம் இன்று முடிவுக்கு வந்தது.
பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 20-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் உள்பட ஏராளமானோர் இறுதிக்கட்டத் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதேபோல், உத்தரப்பிரதேசத்தின் மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள 16 மாவட்டங்களில் இன்று பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








