காதலியுடன் கம்பி நீட்டிய மாப்பிள்ளை… மாலையுடன் காத்திருந்த மணப்பெண்

செங்கல்பட்டு அருகே திருமண மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை காதலியுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த குமிழி கிராமம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த உமாபதி, மகாலட்சுமி ஆகியோரின் மகன்…

செங்கல்பட்டு அருகே திருமண மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை காதலியுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த குமிழி கிராமம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த உமாபதி, மகாலட்சுமி ஆகியோரின் மகன் சதீஷ்குமார் என்பவருக்கும், செங்கல்பட்டு மெய்யூர் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி நிர்மலா ஆகியோரின் மகள் மணப்பெண் திவ்யா ஆகிய இருவருக்கும் குடும்ப
சம்பரதாயபடி பெண் பார்த்து கடந்த 5 மாதத்திற்கு முன்பு இருவீட்டார் முன்னிலையிலும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் முடிந்த நாளிலிருந்து மாப்பிள்ளை சதிஷ்குமார் பெண்ணிடம் சரிவர பேசியதில்லை. மணப்பெண் திவ்யா ஃபோன் செய்தாலும் பதிலளிக்காமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் பெண் வீட்டார் மாப்பிள்ளை விட்டாரிடம் பலமுறை கூறி சரியான காரணத்தையும் சொல்லாமல் மறைதுள்ளனர்.

இரு வீட்டாரும் முறைப்படி பத்திரிக்கை அடித்து அனைத்து உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதையடுத்து நேற்று இரவு தனியார் திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடத்தப்பட்டது. இருவீட்டார் உறவினர்களும் நேற்று இரவு நடைபெற்ற பெண் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாப்பிள்ளை சதீஷ்குமார், மணப்பெண் திவ்யா ஆகியோரை வாழ்த்தி
புகைப்படங்கள் எடுத்தனர்.

இந்நிலையில் காலை திருமணத்திற்கு திருமண மேடையில் அய்யர் முதல்கொண்டு தாலி, தேங்காய் பூ மழையுடன் காத்திருந்து மணப்பெண்ணை அமரவைத்து நலங்கு வைத்து மாத்திரம் ஓதினார். அப்போது மாப்பிளை அழைத்த போது மணவறையிலிருந்து மாப்பிள்ளை காணவில்லை என்றதும் சினிமாவில் நடப்பது போல் அனைவரையும் பதறவைத்தது.

பின்னர் அங்குள்ள இடங்களில் மாப்பிள்ளையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாப்பிள்ளையோ தான் காதலித்த பெண்ணுடன் ஓடிவிட்டார் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது. இதனால் ஆயிரம் கனவுகளுடன் மணமேடை ஏறிய மணப்பெண்ணுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

இது குறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர். மாப்பிள்ளை ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அதனை மாப்பிள்ளை வீட்டார் திட்டம் போட்டு மறைத்து வரதட்சனைக்காக எங்களை ஏமாற்றியதாக கூறுகின்றனர். இதில் 40 சவரன் தங்க நகை ஏசி, கட்டில், பிரோ, 1.50 லட்சம் மதிப்பில் 125 சிசி.யமகா பைக் உள்ளிட்ட திருமணத்திற்கு தேவையான அனைத்து சாமான்களும் வரதட்சணையாக கொடுத்தும் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு சென்று அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.