மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் (79) உடல் அரசு அடக்கம் செய்யப்பட்டது.
கேரள முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி தொண்டை புற்றுநோய் காரணமாக பெங்களூரூ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜூலை 18ஆம் தேதி காலமானார். பெங்களூருவில் அவரது உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் அவரது உடல் கோட்டயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மறைந்த தங்கள் தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து புனித ஜார்ஸ் தேவாலய வளாகத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் உம்மன் சாண்டியின் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அரசு மரியாதை இன்றி தனது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என உம்மன் சாண்டி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவரது விருப்பதை நிறைவேற்றும் வகையில், அரசு மரியாதை இல்லாமல் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஏ.கே.அந்தோணி, மாநில அமைச்சா்கள், பல்வேறு கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனர்.







